பதிவு செய்த நாள்
25
ஆக
2012
11:08
ஆழ்வார்குறிச்சி: சிவசைலம் சிவசைலநாதர்-பரமகல்யாணி அம்பாள் கோயிலில் தாமிரபரணி புஷ்கர யாகம் நடந்தது.தாமிரபரணியை மேலும் புனிதப்படுத்துவதற்காகவும், தாமிரபரணியில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காகவும் தாமிரபரணி அமைப்பின் சார்பில் சிவசைலம் சிவசைலநாதர்-பரமகல்யாணி அம்பாள் கோயில் முன்புள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் விசேஷ யாகமும், கலச பூஜையும் நடந்தது. சென்னை ஸ்வீட்ஸ் அதிபர் மாரியப்பன், மகேஸ்வரி மாரியப்பன் தலைமையில் 9 கலசங்களில் புனிதநீர் வைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை இருவரும் துவக்கி வைத்தனர்.அத்ரி அடியார் கண்மணி, நெல்லை சுரேஷ்லெட்சுமி, தாமிரபரணி அமைப்பு மாநில செயலாளர் தயானந்ததுரை, திட்ட செயல் இயக்குனர் வக்கீல் கார்த்தீசன், மாவட்ட பொருளாளர் ஆனந்த், மேலப்பாளையம் மண்டல தலைவர் சின்னத்துரை, மாநகர தலைவர் எஸ்.ஆர்.எஸ்.ராஜா, பாளை., மண்டல தலைவர் முப்புடாதி, சென்னை ஸ்வீட்ஸ் பொறுப்பாளர் ஹரிகரன், வக்கீல் தயாளலட்சுமணன், பாரதிராஜன், தேவி, த்ரி ஸ்டார் லெட்சுமணன், உமாசக்தி லெட்சுமணன், அரசபத்து கால்வாய் நீர்பாசன கமிட்டி தலைவர் சவுந்தரராஜன், மதன்சிங் ஆகியோர் யாகம், கலச பூஜை, ஜெபத்தில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.திருச்செந்தூர் ஆண்டி ஸ்தானிகர் பூஜைகளை நடத்தினார். பின்னர் பூஜை செய்யப்பட்ட 9 கலச நீரும் கருணை ஆற்றிற்கு எடுத்து செல்லப்பட்டு கருணையாற்றிற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட நீர் ஆற்றுடன் கலக்கப்பட்டது. முன்னதாக சிவசைலநாதர்- பரமகல்யாணி அம்பாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகளை நாரம்புநாதபட்டர் நடத்தினார். தாமிரபரணி புஷ்கர யாக ஏற்பாடுகளை திருநெல்வேலி மேற்கு மாவட்ட தலைவர் விஜயசுந்தர், பொது செயலாளர் தயாளலட்சுமணன், கடையம் ஒன்றிய தலைவர் மதன்சிங், பொது செயலாளர் பாரதிராஜன், துணைத் தலைவர் சவுந்தர்ராஜன் மற்றும் தாமிரபரணி அமைப்பினர் செய்திருந்தனர். முன்னதாக பூஜை மற்றும் வேள்விகளில் கலந்து கொண்டவர்களுக்கு சென்னை ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் உரிமையாளர் மாரியப்பன் மற்றும் மகேஸ்வரி மாரியப்பன் இனிப்புகள் வழங்கினர்.