பதிவு செய்த நாள்
25
ஆக
2012
11:08
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் நேற்று மாலை எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத திருப்பதி பெருமாளை நூற்றுக்கணக்கான பக்தர்கள் திவ்யதரிசனம் செய்து பரவசம் அடைந்தனர்.திருப்பதி திருமலை தேவஸ்தானம் தாச சாகித்ய திட்டத்தின்படி, பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீவேங்க ட பிரசன்ன வைபவம் நேற்று மாலை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருப்பதி நித்ய கல்யாண பெருமாள் ஸ்ரீரங்கம் சிருங்கேரி கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.இரவு ஏழு மணி முதல் 9 மணி வரை, நீண்ட வரிசையி ல் காத்திருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருப்பதி பெருமாள், தாயார் உற்சவர்களின் திவ்ய தரிசனத்தை ஸேவித்து பக்தி பரவசமடைந்தனர்.தீர்த்தவாரி: நடப்பாண்டு ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசை வருவதால் இம்மாதத்தை "அதிக அமாவாசை என்று கூறுவர். 20 ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்று ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசை வரும்."அதிக அமாவாசை மாதத்தின்போது, ஒரே நாளில் திருப்பதி பெருமாள், மேல் திருப்பதி, கீழ் திருப்பதி என இரண்டு இடங்களில் தீர்த்தவாரி கண்டருள்வது வழக்கம். முதல்முறையாக இன்று (25ம் தேதி) ஸ்ரீரங்கம் காவிரியில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருள்கிறார்.இன்று காலை 4.30 மணிக்கு, சுப்ரபாதம், பஜனை, உபன்யாசம் நடக்கிறது. 7.30 மணிக்கு, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை காவிரி ஆற்றில் பெருமாள் எழுந்தரு ளி தீர்த்தவாரி கண்டருள்கிறார்.ஸ்வாமி மண்டபம் திரும்பிய பின்னர் 10 மணிக்கு, "ஸ்ரீரங்கம் மற்றும் சப்தபிரகார மகாத்மித்யம் குறித்து ஆனந்த தீர்த்தாச்சாரியாரின் உபன்யாசம் நடக்கிறது. மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை, திவ்ய நாம சங்கீர்த்தன பிரதட்சணம், ரங்கா, ரங்கா கோபுரத்தின் முன் துவங்குகிறது.திருப்பதி பிரம்மோற்ஸவத்தில் பங்கேற்கும் 3,000 கலைஞர்கள் பெருமாளுடன் சப்த பிரகார வலம் வருகின்றனர். இரவு ஏழு மணிக்கு, ஸ்ரீபரத்கலா அகாடமியின் நூல் வெளியீட்டு விழாவும், ஏகாந்த மற்றும் ஊஞ்சல் சேவையும் நடக்கிறது.நாளை (26ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன், திருப்பதி பிரம்மோற்ஸவத்தில் பங்கேற்கும் 3,000 கலைஞர்கள் பெருமாளுடன் மீண்டும் சப்த பிரகார வலம் வருகின்றனர்.காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, உலக நன்மைக்காக புரு÷ஷாத்தம யாகம், லட்ச புஷ்பார்ச்சனை, மங்கள ஆரத்தி நடக்கிறது. இத்துடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பதி ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் திருப்பதிக்கு திரும்புகிறார்.ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் சப்த பிரகார கமிட்டித்தலைவர் பூர்ண புஷ்கலா, செயலாளர் விஷ்ணுசாகர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.