பதிவு செய்த நாள்
25
அக்
2022
04:10
சூலூர்: செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில், இந்த சஷ்டி விழா இன்று துவங்குகிறது.
சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா இன்று காலை காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. தினமும் காலை, 7:30 மணிக்கு, யாக சாலை பூஜைகள் துவங்குகின்றன. 10:30 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, சத்ரு சம்ஹார பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. வரும், 30 ம்தேதி மூன்று கால அபிஷேக அலங்கார பூஜைகள் நடக்கின்றன. மதியம் பெரியநாயகி அம்மன் சன்னதியில் சக்தி வேல் வாங்கி சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு, மலையை சுற்றி சூரசம்ஹாரம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு சுவாமி மலைக்கு செல்லும் வைபவமும், அபிஷேக பூஜையும் நடக்கிறது. 31 ம்தேதி காலை, 9:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவ பூஜைகள் நடக்கின்றன. 12:30 மணிக்கு மாங்கல்ய தாரணம் நடக்கிறது.