பதிவு செய்த நாள்
28
அக்
2022
06:10
சென்னை: சென்னை வடபழநி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி சுவாமி புறப்பாடு, கந்த சஷ்டி லட்சார்ச்சனை நடைபெறுகிறது, விழாவில் இன்று (28 ம் தேதி) நாக வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார். தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை கல்லூரியைச் சேர்ந்த 108 மாணவ, மாணவியர் பங்கேற்ற கந்த சஷ்டி பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் த. வேலு, திரு. ஜெ. கருணாநிதி, தக்கார் ஆதிமூலம், இணை ஆணையர் ந.தனபால், துணை ஆணையர்/செயல் அலுவலர் திருமதி முல்லை, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நாளை 29ம் தேதி மங்கள கிரி விமானத்திலும் பால சுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடக்கிறது. 30ம் தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 31ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. நவ., 1ல் வடபழநி ஆண்டவர் மங்கள கிரி விமானத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும், 2ம் தேதி சொக்கநாதர்-மீனாட்சி அம்மன், பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சியும், 3ம் தேதி வடபழநி ஆண்டவர் புறப்பாடு நிகழ்ச்சியும், 4ம் தேதி அருணகிரிநாதர் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விழாவிகான ஏற்பாடுகளை தக்கார் எல். ஆதிமூலம் அவர்கள், செயல் அலுவலர் முல்லை ஆகியோர் செய்து வருகின்றனர்.