சபரிமலை யாத்திரை முதன்முதலாக செல்பவர்கள் நடத்தும் சடங்கு கன்னி பூஜை. இதை வெள்ளக்குடி, படுக்கை, ஆழிபூஜை என்பர். மண்டல காலமாகிய கார்த்திகை முதல் நாளில் இருந்து மார்கழி 11க்குள் (இந்த ஆண்டு நவ.17 முதல் டிச.26க்குள்) வீட்டில் இச்சடங்கை நடத்த நாள் குறித்து விட வேண்டும். இதற்காக பந்தல் அமைத்து அதன் நடுவில் மண்டபம் அமைக்க வேண்டும். அதில் ஐயப்பன் படம் வைத்து சுற்றிலும் கணபதி, மாளிகைப்புறத்தம்மன், கருப்பசுவாமி, கடுத்தசுவாமி, வாபர், ஆழி ஆகியவற்றுக்கு உரிய இடங்களை ஒதுக்கி விளக்கேற்ற வேண்டும். எல்லா தெய்வங்களுக்கும் அவல் பொரி, பாக்கு, சித்ரான்னம் படைத்து பூஜை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.