களியக்காவிளை: குரியன்விளை ஸ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோவிலில் தேவியின் சுயம்புவில் இளநீர் அபிஷேகம் நடந்தது. களியக்காவிளை அருகே பாத்திமாநகர் குரியன்விளையில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை முதல் நாள் தேவியின் சுயம்புவில் இளநீர் அபிஷேகம் நடப்பது சிறப்பு. இந்த வருடம் கார்த்திகை மாதம் முதல் தேதியான நேற்று காலை அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமம், முத்துக்குடை அணிவகுப்புடன் தேவியின் சுயம்பு யாகசாலையில் எழுந்தருழல், இளநீர் அபிஷேகம், சிறப்பு பூஜை , அலங்கார தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து இருந்தனர்.