பதிவு செய்த நாள்
18
நவ
2022
10:11
கொல்லங்கோடு: 41 நாள் மண்டலகால பூஜைகளுக்காக கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் மூலகோவிலில் இருந்து திருவிழா கோவிலுக்கு எழுந்தருளினார். கொல்லங்கோடு பத்ரகாளி
அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒரே அம்மனுக்கு இரண்டு கோவில்கள் உள்ளன. கண்ணனாகம் அருகே வ ட்டவிளையில் மூலகோவில் அமைந்து உள்ளது. அங்கிருந்து கிழக்கு நோக்கி சுமார் 2 கி.மீ., தூரத்திற்கு உட்பட்ட வெங்கஞ்சி பகுதியில் திருவிழா கோவில் உள்ளது.
இங்கு தான் ஆண்டுதோறும் குழந்தைகளுக்காக தூக்க நேர்ச்சை நடக்கும். இதேப்போன்று 2 ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாத மண்டல கால பூஜைகளும் வெங்கஞ்சி கோவிலில் நடக்கிறது. இக்கோவிலில் இந்த ஆண்டைய கார்த்திகை மாத சிறப்பு பூஜைகள் நேற்று துவங்கியது. இதை அடுத்து அம்மன் நேற்று மாலை 4.30 மணிக்கு வட்டவிளையில் இருந்து வெங்கஞ்சி கோவிலுக்கு எழுந்தருளினார். அம்மன் விக்ரகங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வழிநெடுகிலும் பக்தர்கள் தோரணங்கள் கட்டியும், பூஜை பொருட்கள் சமர்ப்பித்தும் வணங்கினர். 41 நாள் மண்டல கால பூஜை கள் முடிவடைந்த பின் அம்மன் மீண்டும் மூலஸ்தான கோவிலுக்கு எழுந்தருளுவார். அதே வேளை மூலகோவிலில் அம்மன் சன்னதி தவிர பிற சன்னதிகளில் வழக்கம் போல் நடை திறந்து பூஜைகள் நடக்கும். அம்மனுக்கு வெங்கஞ்சி கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் வழக்கமான பூஜைகளும் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி தலைமையில் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் செய்து உள்ளனர்.