அன்னூர்: திம்ம நாயக்கன்புதூர் பைரவர் கோவிலில், எட்டாம் ஆண்டு விழா நேற்று நடந்தது.
அன்னூர் அருகே திம்மநாயக்கன் புதூரில் பைரவர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இக் கோவிலின் எட்டாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. காலையில் பால், தேன், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. மிட்டாய்களால் பைரவருக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.