ஸ்ரீவில்லிபுத்தூர் சிவன் கோயிலில் பாம்பு; பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2022 04:11
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் நேற்று இரவு 7:00 மணிக்கு விநாயகர் சன்னதி அருகே பாம்பு ஒன்று நடமாடியது கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து கோவில் அலுவலர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு அலுவலர் குருசாமி மற்றும் அலுவலர்கள் கோயிலுக்கு விரைந்து வந்து பாம்பினை பிடித்தனர். இது சுமார் 4 அடி நீளம் உள்ள தண்ணீர் சாரை பாம்பு என தெரியவந்தது. பிடிபட்ட பாம்பு கண்மாய் பகுதியில் விடப்பட்டது. இதுகுறித்து பக்தர் மாரியப்பன் கூறுகையில், கோயிலில் விநாயகரை தரிசிக்கும் போது பாம்பு நடமாடியதை பார்த்தேன். இதனால் சில நொடிகள் அதிர்ச்சியடைந்தேன். பின்னர் தீயணைப்புத் துறையினர் வந்து 30 நிமிடத்திற்கு மேலாக தேடி பாம்பை பிடித்து சென்றனர். இதனையடுத்து நிம்மதி அடைந்தோம். தொடர் மழையின் காரணமாக பூமிக்குளிர்ந்து தற்போது பாம்புகள் வயல்வெளி, கண்மாய் பகுதிகளை விட்டு தற்போது மக்கள் அதிகம் நடமாட கூடிய பகுதிகளுக்கு வருகிறது. நீர்வரத்து ஓடைகள், கிராமப்புற ரோடுகளில் அதிகளவில் பாம்பு ரோட்டினை கடந்து செல்கிறது. இதனால் பொதுமக்கள் உஷாராக இருப்பது அவசியம்.