இடையகோட்டை மகா மாரியம்மன் கோயிலில் 10008 விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2022 12:12
இடையகோட்டை: ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை அரண்மனைக்கு சொந்தமான இடையகோட்டை மகா மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூன்றாம் நாள் விளக்கு பூஜை நடைபெறும். நேற்று 10 ஆயிரத்து 8 அகல்விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜை நடந்தது. ஜமீன்தார் சரவணன் தலைமையில் 12 ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து கோவிலின் வெளிப்பகுதியில் கலர் கோலப்பொடிகளால் ஓம், மயில், சிவன், பூக்கள் போன்ற ஓவியங்கள் வரைந்து அதன் மேல் 10 ஆயிரத்து 8 அகல் விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.