தேவகோட்டை: தேவகோட்டை அருகே சண்முகநாதபுரத்தில் புது ஊரணி அருகில் பாலாஜி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலும், அத்துடன் சிதம்பர விநாயகர் கோவிலும் உள்ளது. இக்கோவில்களின் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக வேத விற்பன்னர்களின் யாகசாலை சிறப்பு பூஜைகள் செய்து பூர்ணாகுதியை தொடர்ந்து கும்ப அபிஷேகங்கள் செய்தனர். மகா அபிஷேகம் சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை ஆகம விதிகள் குழு தலைவர் முன்னாள் ஐகோர்ட் நீதிபதி சொக்கலிங்கம், மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி இந்துமதி , கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.