பதிவு செய்த நாள்
12
டிச
2022
03:12
மேட்டுப்பாளையம்: சிவன்புரம் ஐயப்பன் கோவிலில், 32 வது மண்டல மகோற்சம் விழா நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் காரமடை ரோடு, சிவன்புரத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையும், மகோற்சவ விழாவும் நடைபெறும். இந்த ஆண்டு, 32 வது மண்டல மகோற்சவ விழாவும், மண்டல பூஜையும், கடந்த மாதம், 17ம் தேதி மகா கணபதி பூஜையுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஐயப்பனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
வருகிற 14ம் தேதி, 108 கூடைகளில் மலர்களைக் கொண்டு, ஐயப்பனுக்கு மகா புஷ்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 27 ம் தேதி இரவு பட்டிமன்றம் நடைபெற உள்ளது. ஜன. 1ம் தேதி ஐயப்ப சேவா சமிதியின், 63வது ஆண்டு விழா நடைபெற உள்ளது. அன்று புத்தாண்டு சிறப்பு பூஜைகளும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. எட்டாம் தேதி, 32ம் ஆண்டு மண்டல மகோற்சவம் விழா நடைபெறுகிறது. ஒன்பதாம் தேதி கொடியேற்றமும், பத்தாம் தேதி ஸர்ப்ப பலி பூஜையும், 11ம் தேதி கோவை சரவணம்பட்டி சங்கீத பிரியா குழுவினரின் நாம சங்கீதனமும், 13ம் தேதி பள்ளி வேட்டையும், 14ம் தேதி காலை உஷ பூஜை, ஆறாட்டு கொடிக்கல்பறை, கொடி இறக்கம் நடைபெற உள்ளது. மாலை,5:30 மணிக்கு ஐயப்ப சுவாமி, காந்தி மைதானம் மாரியம்மன் கோவிலில் இருந்து, ஐயப்பன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சமிதி தலைவர் அச்சுதன் குட்டி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.