Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா: பகல் பத்து உற்சவம் துவக்கம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா நாளை துவக்கம்: ஜன., 2ல் பரமபதவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா நாளை துவக்கம்: ஜன., 2ல் பரமபதவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

22 டிச
2022
01:12

திருச்சி: 108 வைணவத் திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் மார்கழி மாதம் நடக்கும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த வைகுந்த ஏகாதசி நாளை 23ம் தேதி தொடங்க உள்ளது. திருவிழா நடக்கும் 20 நாட்களில் திவ்விய பிரபந்தத்தில் உள்ள நாலாயிர பாசுரங்களையும் பல்வேறு பகுதிகளாக பிரித்து தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பெருமாள் முன்னர் அரையர்கள் அபிநயத்தோடு பாடுவார்கள். இதனால் இந்த உற்சவத்திற்கு திருவத்யயன உத்சவம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

இந்த ஆண்டு வைகுந்த ஏகாதசி விழாவின் பகல் பத்து முதல் திருநாள் நாளை 23ம் தேதி தொடங்குகிறது. முன்னதாக இன்று 22ந் தேதி இரவு உற்சவத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியாக மூலவர் அரங்கநாதர் சன்னதி மூலஸ்தானத்தில்  திருமங்கையாழ்வார் பாடிய திருநெடுந்தாண்டகம் பகுதி பாடப்படும். பகல்பத்து : 20 நாட்கள் நடக்கும் இந்த உற்சவம் பகல்பத்து, இராப்பத்து  என்று இருபகுதிகளாக பிரித்துக் கூறப்படுகிறது.  இதில் நாளை தொடங்கி 2023 ஜனவரி 1ந் தேதி வரை பகல் பத்து எனப்படும் திருமொழித்திருநாள் நடைபெறும். இந்த நாட்களில் உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் தினமும் அதிகாலையில் புறப்பட்டு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் பல்வகை உயர்ந்த திருவாபரணங்களை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தானமிருப்பார்.  அப்போது அரையர்கள் ஸ்ரீநம்பெருமாள் முன்பு ஆழ்வார்களின் திருமொழிப்பாசுரங்களை அபிநயத்தோடு பாடிக் காட்டுவார்கள்.

நாச்சியார் திருக்கோலம் : பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான ஜனவரி 1ந் தேதி உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

பரமபதவாசல் திறப்பு : வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு ஜனவரி 2ம் தேதி அதிகாலை நடக்கவுள்ளது. அன்று அதிகாலை 3.30 மணியளவில் ஸ்ரீநம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளிமாலை, மற்றும் இரத்தினஅங்கி அணிந்து கண்களை நிறைக்கும் அழகுடன் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் புறப்படுவார். அதனைத் தொடர்ந்து அதிகாலை 4.45 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியே பெருமாள் வெளியில் வருவார். காலை 7.00 மணியளவில் ஸ்ரீநம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு இரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

மூலவர் முத்தங்கி சேவை : உற்சவத்தின் 20 நாட்களிலும் மூலவர் அரங்கநாதருக்கு முற்றிலும் நல்முத்துக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட முத்தங்கி அணிவிக்கப்படுகிறது. இந்த முத்தங்கியல் ஜனவரி 11ந் தேதி வரை பக்தர்களுக்கு அரங்கநாதர் சேவை சாதிப்பார். வைகுந்த ஏகாதசியின் விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் விழாக்கோலம் கொண்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாக அதிகாரியும், இணை ஆணையருமான திரு.செ.மாரிமுத்து தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
திருச்சி: 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், வருகிற, 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்கவாசல் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் பகல் பத்து ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவேரிக் கரையில் பழமையான பாண்டுரங்கன் பஜனை மடம் அமைந்துள்ளது. மார்கழி மாதத்தில் அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் பகல் பத்து ஐந்தாம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் சௌரிக்கொண்டை அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar