பதிவு செய்த நாள்
28
டிச
2022
06:12
திருவட்டார்: குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவில்களுள் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வைகுண்டஏகாதசி விழா வரும் 2ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறப்பு, திவ்விய தரிசனம், அகண்டநாம ஜெபம், சிறப்பு அபிஷேகம், மலர் முழுக்கு, மாலை தீபாராதனை, ஆன்மிக சொற்பொழிவு, இரவு பரமபத வாசல் திறப்பு, சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளல் உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை,திருக்கோவில் நிர்வாகம், ஸ்ரீ ஆதிகேசவ பக்தர் சங்கடிரஸ்ட்மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.