மரக்காணம்; ஆவணிப்பூர் திரவுதியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது. திண்டிவனம் அடுத்த ஆவணிப்பூர் திரவுபதியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவின் 48 வது நாள் மண்டலாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி ஹேமம் நடந்தது.பின்னர் ஸ்ரீலஸ்ரீ சீனுவாச குருக்கள் தலைமையில் மூலவருக்கு 108 வலம் புரி சங்கு மற்றும் கலச புனித நீர் அபிஷேகம், சந்தனகாப்பும் நடந்தது.