பொன்னேரி: மீஞ்சூரில் நடந்த காசி விசுவநாத தரிசன நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரளாக பங்கேற்றனர்.பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலத்தின் பவள விழாவை முன்னிட்டு காசி விசுவநாதர் தரிதனம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களாக மீஞ்சூர், விவேகானந்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜயோக தியான பொறுப்பு ஆசிரியை சகோதரி பிரம்மா குமாரி வித்யா தலைமையில் வகித்தார். விழாவிற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் பகவான், முன்னாள் அமைச்சர் சுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ராஜயோக படவிளக்கம், தியானம், புத்தகக் கண்காட்சி என, தனித்தனி அரங்கங்களில் நிகழ்ச்சி நடந்தது. மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து, ஏராளமான மக்கள் திரளாக வந்திருந்தனர்.