பதிவு செய்த நாள்
07
ஜன
2023
12:01
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக நடந்தது.
சிவ பெருமானுக்கு நடக்கும் நடக்கும் விசேஷங்களில் ஆணி மற்றும் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நேற்று சிவன் கோவில்களில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக நடந்தது. செஞ்சி அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு துவங்கி 9 மணிவரை நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாளுக்கு கஸ்துாரி மஞ்சள், விபூதி, சந்தனம், பன்னீர், வெட்டிவேர், ஜவ்வாது, பால், தேன், இளநீர் உட்பட ஏராளமான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு மகா அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்து. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. திருமுறை கழகத்தினர் அபிஷேகத்தை நடத்தினர். அருணாச்சல ஈஸ்வரர் கோவில் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.