நெல்லையப்பர் கோயிலில் 22வது மகாம்ருத்யுஞ்ஜய ஜெபவேள்வி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2023 04:01
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் 22ம் ஆண்டு மகா ம்ருத்யுஞ்ஜய ஜெப வேள்வி கோலாகலமாக நடந்தது. திருநெல்வேலி எனப் பெயர் வரக்காரணமான காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு தோறும் வரி மாதம் மகா ம்ருத்யுஞ்ஜய ஜெப வேள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஜெப வேள்வி நேற்று நெல்லையப்பர் கோயிலில் நடந்தது. சுவாமி சன்னதியில் காலையில் கணபதி ஹோமம், கும்ப பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மகா ம்ருத்யுஞ்ஜய ஜெப மந்திரங்களை பாராயணம் செய்தனர். காலை ௯9 மணிக்கு துவங்கிய வேள்வி மதியம் வரை நடந்தது. இதில் நெல்லையப்பர் காந்திமதியம்பாள் பக்தர் பேரவையினர், கைலாசநாத சுவாமி பக்தர்கள் பேரவையினர், பாளை ராஜகோபாலசுவாமி பக்தர் பேரவையினர், தச்சநல்லூர் பெருமாள் பக்தர் பேரவையினர், உட்பட ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர், காந்திமதியம்பாள் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.