கடலாடி: மார்கழி மாதம் ஆரம்பித்ததில் இருந்து நிறைவு வரை தொடர்ந்து அதிகாலை நேரங்களில் ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று பஜனை, நாம கீர்த்தனம் பாடியவாறு பக்தர்கள் சென்று வருகின்றனர். கடலாடி தண்ணீர் பந்தல் முருகன் கோயிலில் இருந்து துவங்கும் ஆன்மீகப் பாடகர்கள், கைகளில் ஆர்மோனியம், மிருதங்கம், மணியோசை உடன் கடலாடி நகரில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று தெய்வப் பாடல்களை பாடி தீபாராதனை தரிசனம் பெற்று சென்று வருகின்றனர். அதிகாலை 4:30 மணிக்கு குளித்து கிளம்பும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தெய்வப் பாடல்களை உச்சரித்தவாறு சென்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி 30 நாட்களும் பஜனை உலாவினை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.