பதிவு செய்த நாள்
15
ஜன
2023
06:01
அயோத்தி,-அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகளில், 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அடுத்தாண்டு மகர சங்கராந்தியின் போது, கோவில் திறக்கப்பட்டு, வழிபாட்டுக்கு தயாராகி விடும், என, உத்தர பிரதேச மாநில தலைமைச் செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்டுமானப் பணிகளை உ.பி., தலைமைச் செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா நேற்று ஆய்வு செய்தார். ராமர் கோவில் அறக்கட்டளை செயலர் சாம்பாத் ராயுடுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன்பின், மிஸ்ரா கூறியதாவது: கோவில் கட்டுமானப் பணிகளில், 50 சதவீதம் முடிவடைந்து விட்டன. கோவிலின் கருவறை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. அடுத்தாண்டு மகர சங்கராந்தியின் போது, கோவில் முழுமையாக வழிபாட்டுக்கு தயாராகி விடும். அப்போது பக்தர்கள் புதிய அயோத்தியை பார்க்கலாம். கோவிலின் மேற்பகுதிக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக, எஸ்கலேட்டர் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.