பதிவு செய்த நாள்
17
ஜன
2023
10:01
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மேற்கு யாக்கரையில் உள்ளது ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில். இக்கோவிலில் புனர் பிரதிஷ்ட்டா மற்றும் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த 14ம் தேதி ஆரம்பித்த நிகழ்ச்சியில் பிஹ்மஸ்ரீ சி.ஜி., நம்பூதிரியின் தலைமையில் கணபதி ஹோமம், ஆச்சாரிய வரவேற்பு, ஆச்சாரியவரணம், கர்பகிரஹ பரிகிரஹம், பிம்ப பரிகிரஹம், பசுதான புண்ணியாகம், சுத்தி வாஸ்து ஹோமம், ரக்ஷோக்னஹோம், பிம்பசுத்தி, வாஸ்து பலி, பிம்ப ஜலாதிவாசம், சய்யா பூஜை, அனுஞ்ன கலசபூஜை, அபிஷேகம், ஜீவோத்வாசனம், பிம்ப ஜலோத்ராணம், சய்யாகமனம், சய்யாபூஜை, பகவத்சேவை ஆகிய பல சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் சிறப்பு நாளான நேற்று காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தனர். பிரஹம கலசபூஜை, நவகபூஜை பிற்கு செண்டை மேளம் முழங்க மூன்று யானைகளின் அணிவகுப்புடன் உற்சவம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 10.30 மணியளவில் கோவிலில் மூலவரான ஸ்ரீ தர்மசாஸ்தா பிரதிஷ்ட்டை செய்யப்பட்டனர். தொடர்ந்து கலசாஅபிஷேகம் நடந்தது. இதையடுத்து மகாவிஷ்ணு, கணபதி, மாளிகப்புரத்தம்மை, மாரியம்மா, கருப்புசாமி, பேச்சியம்மா, குருபிதா ஆகிய உபதேவி-தேவர்களை பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு கலசா அபிஷேகம் நடத்தின. தொடர்ந்து பிரதிஷ்ட்டா தின மகா பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு யானைகளின் அணிவகுப்புடன் "பாலகொம்பு" எழுந்தருளும் வைபவம் நடந்தன. 10 மணிக்கு அயப்பன் பாட்டு நடைபெற்றது. இன்று அதிகாலை 5.15 மணியளவில் நடைபெற்ற குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவு பெற்றனர்.