திருப்பரங்குன்றம் கோயிலின் மாதிரி வடிவமைப்பு சேதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2023 10:01
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயில் திருவாட்சி மண்டபம் முன்பு கோயில் கோபுரங்கள் மலையின் தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாதிரி வடிவமைப்பை குரங்குகள் சேதப்படுத்தி உள்ளன. பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். சீரமைக்க நடவடிக்கை தேவை. கோயில் துணை கமிஷனர் சுரேஷ்: ராஜ கோபுரத்தின் அடிப்பகுதியில் குரங்குகள் கோயிலுக்குள் வராமல் தடுக்க இரும்பு கம்பிகள் அடிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் சேதப்படுத்தியுள்ளன. உபயதாரர் மூலம் கோயிலின் மாதிரி வடிவமைப்பு விரைவில் சீரமைக்கப்பட்டு பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றார்.