திருப்புவனத்தில் தை அமாவாசை, வைகையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2023 10:01
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் வணங்கி வழிபட்டனர்.
காசியை விட வீசம் அதிகம் புண்ணிய ஸ்தலமான திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு வாய்ந்தது. தை அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வைகை ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் அமர்ந்து ஏராளமான பக்தர்கள் திதி,தர்ப்பணம் வழங்கி சூரியபகவானை வணங்கிய பின் விநாயகர் மற்றும் புஷ்பவனேஸ்வரரை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், உடை மாற்றும் அறை உள்ளிட்ட உரிய வசதிகள் செய்து தரப்படாததால் சிரமத்திற்குள்ளாகினார்.வைகை ஆற்றில் பக்தர்கள் வரும் பாதையில் பழைய துணி கழிவுகள்,குப்பைகள் அகற்றாமல் துர்நாற்றம் இருந்தது. வரும் காலங்களில் உரிய வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.