ராசிபுரம் மகா முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2023 05:01
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலையில் அருள்மிகு ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவானது வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த நிலையில் கோவில் சன்னதி முன்பு கணபதி ஹோமம், நவகிரகம் ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூரணாஹுதி தீபாதாரணை நடைபெற்றது. பின்னர் காவிரி ஆற்றில் இருந்த தீர்த்தம் கொண்டுவரப்பட்டு ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து காவிரி தீர்த்தம் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து 3000க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலமானது ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து துவங்கி சேலம் சாலை,நாமக்கல் சாலை, கடைவீதி, கதர்கடை தெரு,பட்டணம் சாலை உள்ளிட்ட வழியாக சென்று இறுதியாக ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு சென்றடைந்தனர்.