அனைத்து வழிபாட்டுத்தலங்கள் இணைக்கும் வகையில் ரயில் சேவை துவங்க வேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2023 05:01
காரைக்கால்: காரைக்காலிருந்து அனைத்து வழிபாட்டுத்தலங்களும் இணைக்கு வகையில் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று முன்னாள் திட்டத்துறை இணை இயக்குநர் மோகன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்காலில் காவிரி டெல்டா ரயில் மற்றும் நெடுங்சாலை திட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் இணைக்கு வகையில் ரயில் சேவையை தொடங்கி வேண்டும் என்று குழுவின் தலைவர் மோகன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மீக மற்றும் சுற்றுலா மையங்களை இணைக்கும் வகையில் முன்பு மீட்டர்கேஜ் பாதை இயக்கப்பட்ட நாகூர் கொல்லம் விரைவு ரயிவே தற்போதைய அகலப்பாதையில் காரைக்கால் நாகூரிலிருந்து கொல்லம் திருவணந்தபுரம் வரை நாகப்பட்டினம்.திருவாரூர்.திருத்துறப்பூண்டி பட்டுக்கோட்டை, தென்காசி, செங்கோட்டை மற்றும் புனலூர் வழியாக மீண்டும் இயக்க வேண்டும். தற்போது கிழக்கு காவிரி டெல்டா பகுதியிலிருந்து தமிழக தென்கோடி மாவட்டங்களுக்கு ஒரு ரயில்கூட இயக்கப்படாத நிலையில் காரைக்காலிருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்பட்ட தினசரி விரைவு ரயில் நாகப்பட்டினம் வழியாக திருச்சி.திருநெல்வேலி, நாகர்கோயில் வழியாக மீண்டும் இயக்கவேண்டும். ரயில்சேவை துவக்கினால் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியால் குறைந்த விலையில் கிடைக்கும்.மேலும் காரைக்காலிருந்து பெங்களூர் வரை இரவு நேர தினசரி விரைவு ரயில் தஞ்சை, திருச்சி.தருமபுரி மற்றும் ஒசூர் வழியாக இயக்கவேண்டும். வாரணாசியிலிருந்து திருநள்ளார் வரை வாரம் இருமுறை அதிவிரைவு ரயில் இயக்கவேண்டும். காசிவிஸ்வநாதர் அருள்பெற்று பக்தர்கள் திருநள்ளாருக்கு வருகைதந்து பகவானை தரிசனம் செய்த பின்னர் ராமேஸ்வரம் சென்று 21புனித தீர்த்தில் நீராடி புதிய மனிதனாக மாறவேண்டும் என்பது பொது நியதியாகும் இதனால் திருநள்ளாரிலிருந்து ராமேஸ்வரப் வரை தினசரி விரைவு ரயில் இயக்கவேண்டும். மேலும் உலகப்புகழ் பெற்ற இந்துகோயில் இஸ்லாமிய வழிப்பாட்டுத்தலங்கள் மற்றும் கிருஸ்துவ தேவாலயங்கள் இவ்வழித்தட ரயில் இணணப்பதால் இந்த விரைவு ரயில் மதநல்லினக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளக்கும் லவே மத்திய அரசு அனைத்து வழிபாட்டுத்தலங்களும் இணைக்கு வகையில் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று அமைச்க நல்கு கோரிக்கை விடுத்துள்ளார்.