பதிவு செய்த நாள்
27
ஜன
2023
03:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்டியல் காணிக்கையாக பக்தர்கள், இரண்டு கோடியே, 71 லட்சத்து, 96 ஆயிரத்து, 869 ரூபாய் செலுத்தியிருந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் முடிந்து உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, மார்கழி பவுர்ணமி முடிந்த நிலையில், உண்டியல் காணிக்கை நேற்று முன்தினம் காலை தொடங்கி இரவு, 10:00 மணி வரை எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள், இரண்டு கோடியே, 71 லட்சத்து, 96 ஆயிரத்து, 869 ரூபாய் செலுத்தியிருந்தனர். மேலும், 320 கிராம் தங்கம், 2,684 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். முதன்முறையாக உண்டியல் எண்ணும் பணி, நேரடியாக ஆன்லைன் மூலமாக ஒளிபரப்பப்பட்டது.