கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி தேரோட்டம் கோலாகலம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2026 04:11
தூத்துக்குடி; கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரத வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது. வரும் 4ம் தேதி அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார். அன்று இரவு சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. 5ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.