சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; பக்தர்களின்றி நடந்தது.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2023 02:02
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத பிரதோஷ வழிபாடு பக்தர்களின்றி நடந்தது. சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் வெளியூர் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மழையின் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை, சென்னை உட்பட பல்வேறு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சில பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரம் வந்தனர். மலையேற அனுமதிக்கபடாததால் வனத்துறை கேட் முன்பு சூடமேற்றி கோயிலை நோக்கி வணங்கி, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வத்திராயிருப்பு ரோட்டில் போலீஸ் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு கோயிலுக்கு வந்த உள்ளூர் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மாலை 4:30 மணிக்குமேல் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதியில் பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் இல்லாமல் அடிவாரம் முதல் கோயில் வரை வெறிச்சோடி காணப்பட்டது. வத்திராயிருப்பு, சாப்டூர் போலீஸ் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.