சுவாமிமலை முருகன் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி: பக்தர்கள் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2023 02:02
தஞ்சாவூர், சுவாமிமலை முருகன் கோவிலில் தைப்பூசத்தை யொட்டி தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுவடை வீடுகளில் நான்காம் படை வீடாக, தஞ்சாவூர் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. முருகபெருமான் தனது தந்தை சிவனுக்கு ஒம் என்னும் பிரணவ மந்திர பொருளை,குருவாக இருந்து உபதேசம் செய்தார். 60 தமிழ் ஆண்டு தேவதைகளும், படிக்கட்டுகளாக இருந்து முருகனுக்கு சேவை செய்கிறது என்பது ஜதீகம். இத்தகையை சிறப்பு மிக்க கோவிலில் இந்தாண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு, கடந்த ஜன.26ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வசந்த மண்டபம் எழுந்தருளினர். 27ம் தேதி முதல் பிப்.2ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாவும், நேற்று (3ம் தேதி) தேரோட்டமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத்தை யொட்டி இன்று(04 ம் தேதி ) காலை வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிகள் நான்கு வீதிகளில் வீதியுலா சென்று, காவிரி ஆற்றுக்கு வந்தார். அங்கு அஸ்ரத் தேவருக்கு 21 வகையான மங்கலப் பொருட்களாக அபிஷேகமும், தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு புனித நீராடினர். நாளை (5-ம் தேதி) சுவாமிகள் யதாஸ்தானம் திரும்புதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.