காளஹஸ்தி சிவன் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2023 08:02
காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தி சிவன் கோயிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் ஸ்ரீ ஞான பிரசுனாம்பிகா சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமியின் ஏகாந்த சேவைக்குப் பின்னர் கோயிலின் பிரதான அர்ச்சகர் கருணாகுருக்கள் தலைமையில் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது முன்னதாக பால் தயிர் தேன் விபூதி சந்தனம் குங்குமம் உட்பட பல்வேறு சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து காலபைரவர் சுவாமிக்கு வடை மாலை , எலுமிச்சை மாலை, கஜமாலைகளுடன் கால பைரவ சுவாமியை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப நெய்வேத்தியங்களை சமர்ப்பித்தனர். பின்னர் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள் மேளதாளங்களுக்கிடையே கால பைரவ சாமியை கோயில் பிரகார உற்சவம் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு. தாரக சீனிவாசலு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் (ஸ்ரீகாளஹஸ்தி) உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு காலபைரவ சாமியை தரிசனம் செய்தனர் .கோயில் வளாகம் முழுவதும் "ஹர ஹர மகாதேவா" "சம்போ சங்கரா" "ஓம் நமசிவாய" என்ற சிவபெருமானின் நாமங்களை பக்தர்கள் முழங்கினர்.