கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2023 07:02
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது முன்னதாக திரவிய அபிஷேகங்களுடன் 4 கால பூஜைகள் நடந்தது வாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன், மூலவர், ஓம்கார விநாயகர், ஓம்கார நந்தி, பாலதண்டாயுதபாணிக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரம், தேவார பாராயணத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
* கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், மகா சிவராத்திரி அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.