பதிவு செய்த நாள்
20
பிப்
2023
07:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதியில் மாசி திருத்தேர் வடத்தை பக்தர்கள் இழுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரம் திருக்கோயில் மாசி சிவராத்திரி விழாவுக்கு பிப்., 11ல் கொடி ஏற்றி திருவிழா துவங்கியது. 9ம் நாள் மாசி திருவிழாவான நேற்று காலை 10 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் அலங்கரிக்கப்பட்ட மாசி திருத்தேரில் எழுந்தருளினர். பின் கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தியதும், அங்கு கூடியிருந்த பக்தர்கள் திருத்தேரின் வடத்தை பிடித்து இழுத்து கோயில் ரதவீதியில் வலம் வந்தனர். அப்போது வீதி எங்கும் கூடியிருந்த பக்தர்கள் மாசி திருத்தேரில் வீற்றிருந்த சுவாமி, அம்மனை ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், கவுன்சிலர் முகேஷ்குமார், ராமேஸ்வரம் காஞ்சி மடம் நிர்வாகி சாச்சா, யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், பா.ஜ., நகர் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.