கொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா 24ல் துவங்கி 5 நாட்கள் நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2023 07:02
கூடலூர்: மசினகுடி, பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா 24ல் துவங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி அருகே, அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா 24ம் தேதி காலை 5.45 மணி கொடியேற்றத்துடன் துவங்கிறது. பகல் 12:30 மணிக்கு, அம்மனை ஊர்வலமாக ஆற்றுக்கு எடுத்து சென்று, சிறப்பு பூஜைகள் செய்த பின், மாலை 4:00 மணிக்கு ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். 25ம் தேதி காலை முதல் பூஜைகள் நடைபெறும். மலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை சிறப்பு அபிஷேம் நடைபெறுகிறது. 26ம் இரவு 8:00 மணிக்கு கங்கை பூஜை நடைபெறும். 27ம் தேதி காலை முதல் சிறப்பு பூஜைகளும் இரவு 10:00 மணிக்கு மாரியம்மன் திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. 28ம் தேதி காலை 8:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவிலுக்கு சிறப்பு அரசு பஸ் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.