திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே சம்பிரதாயமாக பாரி வேட்டையை பல கிராமத்தினர் நடத்துகின்றனர்.
முன்னர் காடுகள் அதிகமாக இருந்த காலத்தில் பெருகும் வன விலங்குகளால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் மன்னர் தலைமையில் சென்று மக்கள் வனவிலங்குகளை வேட்டையாடி குறைத்தனர். வேட்டையாடப்பட்ட விலங்குகளை மக்கள் பிரித்துக் கொள்வது வழக்கம். சிவகங்கை பிரான்மலை பகுதியில் தலைமையிடமாக கொண்டு வள்ளல் பாரி ஆட்சி செய்ததால், வேட்டுவக்குலத்தை சேர்ந்த இவருடைய தலைமையில் நடந்த வேட்டையை நினைவு கூறும் வகையில் இன்றளவும் பாரி வேட்டை நினைவு கூர்கின்றனர். சிவராத்திரியை ஓட்டி பாரிவேட்டை நடத்தப்படுகிறது. தற்போது வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டுள்ளதால் சம்பிரதாயமாக வேட்டையாடுதல் நடக்கிறது. நேற்று காட்டாம்பூர் கிராமத்தினர் காட்டில் விலைக்கு வாங்கிய 25 ஆடுகளை வெட்டி பிரித்து எடுத்துக் கொண்டு வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.