திருச்செந்துார் முருகன் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2023 09:02
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவை முன்னிட்டு, யானை மீது அமர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் கும்பலக்கனத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் முதலியார் மண்டகப்படி 12ம் திருவிழா மண்டபத்தில் உள்ள சிதம்பர தாண்டவ விநாயகர் முன்பு கொடிப்பட்டத்திற்கு நேற்று மாலை 4:15 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கிருந்து யானை மீது அமர்ந்து படிச்செப்பு ஸ்தலத்தார் கிருஷ்ணமுர்த்திதிட்சிதர் கொடிப்பட்டத்தை ஏந்தி உள்மாடவீதி, ரதவீதி சுற்றி கோயிலை சென்று சேர்ந்தார். 10ம் திருவிழாவான 6ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 11ம் திருவிழாவான 7ம் தேதி இரவு தெப்ப உற்சவமும், 12ம் திருவிழாவான 8ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.