மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் சிவராத்திரி திருவிழா இன்று நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2023 09:02
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி யம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி 8 வது நாள் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.
தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து அறநிலையத்துறைக்குட்பட்ட பழமையான மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. தீபாராதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதில்லை. குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் அம்மனை குல தெய்வமாக நினைத்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர். திருவிழா இன்று நிறைவு: பிப்., 18 ல் திருவிழா துவங்கியது. பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் வழங்கும் அம்மனை தரிசிக்க தமிழகத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து செல்கின்றனர். இன்று (பிப்.25) 8 ம் நாள் திருவிழாவுடன், திரூவிழா நிறைவு பெறுகிறது. பக்தர்கள் கரும்பு தொட்டியில் குழந்தை மற்றும் சிறுவர்களை வைத்து நேர்த்திக்கடன், அக்னிசட்டி, மா விளக்கு எடுத்து அம்மனை தரிசித்து வருகின்றனர்.