பதிவு செய்த நாள்
11
செப்
2012
11:09
ஆழ்வார்குறிச்சி: அருணாசலம்பட்டி முப்புடாதி, உச்சிமாகாளி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று (11ம் தேதி) துவங்குகிறது. அருணாசலம்பட்டியில் முப்புடாதி, உச்சிமாகாளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு மகா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் இன்று (11ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதி, கோ பூஜை, நவக்கிரக ஹோமம், துர்க்கா ஹோமத்துடன் துவங்குகிறது. மாலை 4.30 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், பாலிகா ஸ்தாபனம், யஜமானவர்ணம், ஆர்ச்சார்ய வர்ணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், முதல் யாகசாலை பூஜை, தீபாராதனை ஆகியன நடக்கிறது. கும்பாபிஷேக நாளான நாளை (12ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம், கும்பம் எழுந்தருளல் மற்றும் அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.25 மணிக்குள் முப்புடாதி, உச்சிமாகாளி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 8 மணியளவில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை அருணாசலம்பட்டி ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.