காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரத்தில், மங்கள கணபதி கோவில் மஹா கும்பாபிஷேக விழா நாளை (12ம் தேதி) நடக்கிறது.இன்று மாலை, நான்கு மணிக்கு கணபதி ஹோமம், தீபாராதனை நடக்கிறது. 5 மணிக்கு, முதல் காலயாக பூஜையும், இரவு, 10 மணிக்கு மேல் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. நாளை அதிகாலை, 5 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், 9 மணிக்கு மேல், 10 மணிக்குள் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.காரிமங்கலம் அருணேஸ்வரர் கோவில் பிரகாஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் மஹா கும்பாபிஷேக விழாவை நடத்தி வைக்கின்றனர். 10.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவசம் சாத்துதல் ஆகியவை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.