பரமக்குடி கருமலையான் கோயில் மாசி களரி விழா: மஞ்சள் பூசி அருள் கூறிய சாமியாடிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2023 05:02
பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் கருமலையான் கோயில் மாசி களரி விழா நடந்தது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் ஒன்று கூடி விழாவை கொண்டாடுவது வழக்கம். அப்போது கருமலையான், ராக்கச்சி அம்மன், முனியப்பசாமி, பாப்பாத்தி அம்மன், சோனை கருப்பணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து திடலில் இருந்து சாமி ஆடிகள் புறப்பட்டு, குழந்தைகளுக்கு கரும்புத் தொட்டில் எடுத்த அனைவருக்கும் மஞ்சள் பூசி ஆசிர்வதித்தனார். பின்னர் கிராமத்தில் வலம் வந்த சாமி ஆடிகளுக்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர். மேலும் நேற்று முன்தினம் இரவு கருங்குட்டி, செங்குட்டி கரும்பு குடித்தல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பொங்கல் வைத்து கிடாவெட்டி சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன், கிராம தலைவர் ராமன், சண்முகம், மணிமுத்து, பாப்பா, சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.