திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் மார்ச் 6ல் அப்பர் தெப்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2023 11:02
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் மாசி மகம் அப்பர் தெப்பத் திருவிழா மார்ச் 6ம் தேதி நடக்கிறது. முன்னொரு காலத்தில் சைவ மதத்திற்கும், சமண மதத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ரணமாக சமண மதத்தினர், சைவ மய குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் ஆழ்ந்த பக்தியினை பரிசோதிக்கும் பொருட்டு கல்லில் கட்டி கடலில் போட்டனர். அப்போது அப்பர் பெருமான், ‘கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாய’ என்று சிவபெருமானை நினைத்து மனமுருக பாடினார். அப்போது கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. இந்த தெப்ப உற்சவத்தின் மூலமாக அப்பர் பெருமான், தனது பக்தியால் சிவன் அருளின் சிறப்பை உலகிற்கு உணர்த்தி, இறைவனின் திருக்காட்சி பெற்றார் என்ற தத்துவம் விளக்கப்படுகிறது. அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த வரலாற்றிற்கிணங்க பாடல் பெற்ற சைவ சமய தலமான நெல்லையப்பர் கோயிலில் வரும் ௬ம் தி அம்பாள் சன்னதி அருகே அமைந்துள்ள பொற்றாமரை குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி விழாவும், அதை தொடர்ந்து வரலாற்று தத்துவத்தில் அமைந்த படி திருத் தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருக்காட்சி கொடுத்தல் நிகழ்வு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தினமலர் நிர்வாகத்தினர் மற்றும் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.