Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோனியம்மன் தேர்த்திருவிழா ... பழநி மாசி திருவிழாவிற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குஞ்சப்பனை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2023
06:02

மேட்டுப்பாளையம்:குஞ்சப்பனை மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா துவங்கியது. மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் குஞ்சப்பனை மகாமாரியம்மன் கோவில் உள்ளது.

கோவிலில் திருப்பணிகள் செய்து, புதுப்பிக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, இன்று காலை கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் தீபாரதனையுடன் துவங்குகிறது. காலை, 11:00 மணிக்கு கோபுரம் கலசம், முளைப்பாலிகை, தீர்த்தக்குடம் ஆகியவற்றை நாடார் காலனி செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து அழைத்து வரப்படுகிறது. மாலை, 4:30 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை, விநாயகர் பூஜை, முதல் கால யாக பூஜை ஆகியவை நடைபெற உள்ளது. இரண்டாம் தேதி காலை, திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, கோபுர கலசம் அமைத்தல், பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் வைபவம் நடைபெற உள்ளது. மாலை மூன்றாம் கால யாக வேள்வி பூஜையும், மகா மாரியம்மனுக்கு, 1008 சகஸ்ர நாம அர்ச்சனையும், தீபாராதனையும், இரவு குஞ்சப்பனை மகா மாரியம்மனுக்கும், ஆதிமூலவருக்கும் யந்திர ஸ்தாபனம், அஷட்பந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடைபெற உள்ளன. மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை காலை, நான்காம் கால யாக வேள்வி பூஜையை தொடர்ந்து, நாடி சந்தானமும், யாக சாலையில் இருந்து, மூலவர் திருமேனிக்கு, அருள் சக்தியை ஏற்றுதல் ஆகியவை நடைபெற உள்ளது. காலை, 7:30 மணிக்கு தீர்த்த கலசங்கள் கோவிலை வலம் வந்து, கோபுர கலசத்திற்கும், மகாமாரியம்மனுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மூன்றாம் தேதியிலிருந்து, 12 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சபரிமலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாத ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். இக்கோவில், 1970ல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வெள்ளை விநாயகர் கோவில் ஏகாம்பரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி அடுத்தநாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar