பதிவு செய்த நாள்
02
மார்
2023
04:03
வெள்ளலூர்: வெள்ளலூர் இடையர்பாளையத்தில் உமா மகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, 28ல் அரசன்ணன் கோவிலிலிருந்து தீர்த்த குடங்கள் எடுத்து வருதலுடன் துவங்கியது. நேற்று விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம் நடந்தன. மாலை முதல் கால யாக பூஜை, கலச பூஜை, யாக சாலை பிரவேஷம், தீபாராதனை, அருட்பிரசாதம் ஆகியவை நடந்தன.
இன்று காலை இரண்டாம் கால யாக பூஜைகள், விமான கோபுர கலசங்கள் சாபனம், தீர்த்த கலசங்கள் அபிஷேகம், மூன்றாம் கால யாக பூஜைகள் உள்ளிட்டவை நடக்கின்றன. தொடர்ந்து நாளை அதிகாலை நான்காம் கால யாக பூஜைகள், திரவியாஹூதி, பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, கலசப் புறப்பாடு ஆகியவை நடக்கின்றன. 6:00 மணிக்கு விமான கோபுர கலசங்கட்கும், இதையடுத்து பரிவார தெய்வங்கட்கும். கும்பாபிஷேகம் நடக்கிறது. 7:00 மணிக்கு உமா மகேஸ்வரர், உமாமகேஸ்வரி ஆகியோருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக, தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கின்றன. மாலை உமாமகேஸ்வரர் திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.