கொண்டத்து காளியம்மன் கோவிலில் ரூ.16.40 லட்சம் பக்தர்கள் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2023 04:03
அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை நடைபெற்றது. அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் செந்தில்குமார், தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டது. தக்கார் பெரிய மருது பாண்டியன், சரக ஆய்வாளர் ஆதிரை, செயல் அலுவலர் காளிமுத்து, உள்ளிட்டோர் மேற்பார்வையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 16 லட்சத்து, 40 ஆயிரத்து, 701 ரூபாய், 72.100 மில்லி கிராம் தங்கம், 60.700 மில்லி கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கையை எண்ணும் பணியில் திருப்பூர் மஹா விஷ்ணு சேவா சங்க உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.