பதிவு செய்த நாள்
13
செப்
2012
11:09
கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் அய்யனார், வெண்ணியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் அய்யனார், வெண்ணியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 3ம் தேதி தட்டு எறிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து சக்தி அழைத்து காப்பு கட்டுதல், சாத்துகாரன் சந்தி மிதித்தல், ஊரணி பொங்கல், பூங்கரகம் மற்றும் நாள்தோறும் சாமி வீதியுலா நடந்தது.நேற்று தேரோட்டம் நடந்தது. அதையொட்டி பகல் 12 மணியளவில் அய்யனார், வெண்ணியம்மன் சாமிகளுக்கு அலங்கரித்து தேரில் எழுந்தருள செய்யப்பட்டு திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.இதில் எம்.எல்.ஏ.,க்கள் மோகன், குமரகுரு, அழகுவேலுபாபு, கள்ளக்குறிச்சி நகரமன்ற தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய சேர்மன் ராஜசேகர், முன்னாள் தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள் பச்சையப்பன், மூக்கப்பன் பங்கேற்றனர்.