அவிநாசி: அவிநாசி அருகே வேலாயுதம்பாளையத்தில், ஸ்ரீ புற்று மாகாளியம்மன், ஸ்ரீ ஹர்ஷவதன நாராயண பெருமாள் மற்றும் ஸ்ரீ கருப்பராய சுவாமி கோவிலில், பொங்கல் சாட்டு விழா நடைபெற்றது. பொங்கல் விழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று கரகம் எடுத்து வருதல், படைக்கலம் எடுத்து வருதல், அம்மை அழைத்தல் நடைபெற்றது. இன்று அதிகாலை, மாவிளக்கு எடுத்தல், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல் நடைபெறுகிறது. நாளை அலங்கார பூஜை, மஞ்சள் நீராட்டுடன் விழா பூர்த்தி ஆகின்றது. பொங்கல் சாட்டு விழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.