பழநி: பழநி,மலைக்கோயில் செல்லும் மக்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்க மோர் வழங்கப்படுகிறது. பழநி மலை கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. எனவே படிப்பாதை , யானை பாதையில் வரும் பக்தர்களுக்கு வழங்க கோயில் நிர்வாகம் சார்பில் பாதையில் உள்ள இடும்பன் கோயில் அருகே மோர் வழங்கப்படுகிறது. காலை 10:00 மணி முதல் மாலை வரை தொடர்ச்சியாக மோர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பக்தர்கள் மோர் அறிந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து மலைக்கோயில் செல்கின்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயனடைகின்றனர்.