திருநீர்மலை ரங்கநாதர் பெருமாள் கோயிலில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2023 11:03
திருநீர்மலை ரங்கநாதர் பெருமாள் கோயிலில் பங்குனி பெருவிழா பிரமோற்சவத்தில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
திருநீர்மலை, திருநீர்மலையில் பழமை வாய்ந்த ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோவிலில், நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என, நான்கு கோலங்களில், பெருமாள் அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவ விழா, மார்ச், 10 முதல் 19ம் தேதி வரை நடக்கிறது. 14ம் தேதி இரவு கருட சேவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளனர்.