பதிவு செய்த நாள்
16
மார்
2023
06:03
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 14ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
திருவிழாவில், 20ம் தேதி இரவு, அணி எடுப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 21ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கரியகாளியம்மன் அபிேஷகம், இரவு, 11:00 மணிக்கு கம்பம் நடுதல்; 22ம் தேதி காலை, 6:00 மணிக்கு கரியகாளியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், 24ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கரியகாளியம்மன் கடைசி நாள் அபிேஷகம் நடக்கிறது. வரும், 28ம் தேதி இரவு, 9:00 மணிக்கு பூவோடு வைத்தல்; 31ல், வெளிப்பூவோடு ஆரம்பம், இரவு, 11:00 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது.ஏப்., 1ம் தேதி காலை, கொடி கட்டுதல்; 2ம் தேதி ஏ.பி.டி., பூவோடு நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 4ம் தேதி காலை, 9:00 மணிக்கு மகுடம் வைத்தல் பூஜை, 5ம் தேதி காலை, மாவிளக்கு வழிபாடு, திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் நடக்கிறது. ஏப்., 6ம் தேதி இரவு, இரண்டாம் நாள் தேரோட்டம், 7ம் தேதி இரவு, மூன்றாம் நாள் தேரோட்டமும்; தேர்நிலைக்கு வருதல், தெப்பத்தேர் வைபவம் நடக்கிறது.8ம் தேதி காலை, அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு கம்பம் எடுத்தல்; 10ம் தேதி இரவு மஹா அபிேஷகமும் நடக்கிறது.