பதிவு செய்த நாள்
16
மார்
2023
06:03
பழநி: பழநி, மலைக்கோயில் கும்பாபிஷேக,மண்டல பூஜை, சங்காபிஷேகத்துடன் நிறைவு பெற்றது.
பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகம் ஜன.,27ல் நடந்தது. அதனை அடுத்து மண்டல பூஜை தினமும் யாகபூஜையுடன் 48 நாட்கள் நடை பெற்றது. மார்ச்.15 ல் யாக சாலையில் 1008 சங்குகள் வைத்து, விநாயகர் பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்சகவ்யம், கலச பூஜை, சங்கு பூஜை, பாராயணம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இன்று மார்ச்.16,ல் இரண்டாவது கால பூஜை துவங்கும். அதில் பாராயணம் நடைபெற்று, பூர்ணாஹூதி, நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசம், சங்குகளை கோயில் உற்பிரகாரத்தில் எடுத்து வலம் வந்தனர். உச்சிகால பூஜையில், மூலவருக்கு சங்காபிஷேகம், கலசபிஷேகம்,சிறப்பு தீபாதாரணை, அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இணை ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கண்காணிப்பாளர் சந்தரமோகன், பேஸ்கார் வெங்கடேசன், பிச்சை குருக்கள், அமர்தலிங்கம் குருக்கள், செல்வ சுப்ரமணியம் குருக்கள், நெய்க்காரப்பட்டி, அரிமா சங்க நிர்வாகி சுப்புராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.