சிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்பு நிலம் மீட்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2023 06:03
காங்கேயம்: வெள்ளகோவில் அருகே, உத்தமபாளையம் சிவன் கோவிலுக்கு சொந்தமான, 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா, உத்தமபாளையத்தில் பழமையான காசிவிஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலம் உத்தமபாளையம் கிராமத்தில் உள்ளது. ஆணையர் மற்றும் இணை ஆணையர் அறிவுறுத்தலின்படி, நிலங்களை ஆய்வு செய்தபோது, கோவிலுக்கு சொந்தமான நிலம் இரண்டு ஆக்கிரமிப்புதாரர்கள் வசம் இருந்தது தெரியவந்தது. திருப்பூர் உதவி ஆணையர், தனி தாசில்தார் (ஆலய நிலங்கள் ), ஆய்வாளர் காங்கேயம், கோவில் தக்கார் மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் நேற்று சுவாதீனம் எடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தில், கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மொத்தம், 10.70 ஏக்கர் நிலத்தின் மதிப்பு, 2.5 கோடி ரூபாய்.